search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு போட்டிகள்"

    • மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
    • மாணவர்களுக்கு பொது நிதியில் இருந்து, போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியாக ரூ.125 வரை வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்பயிற்சி அளிக்க உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளி கல்வித்துறை வாயிலாக குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் பிறந்த தினவிழா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதேபோல, குறுமைய போட்டியைத் தொடர்ந்து மாவட்ட மற்றும் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள், மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு, குறுமைய போட்டி துவங்கியுள்ளது. மாணவர்களும், ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் போட்டியை நடத்தும் பள்ளி நிர்வாகமே, மாணவர்களுக்கான சிற்றுண்டி, தண்ணீர், டீ மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான உணவு செலவினங்களை ஏற்க வேண்டும். ஆனால் அரசால் அப்பள்ளிக்கான நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதால், அந்தந்த பள்ளித்தலைமையாசிரியர்களே பொது நிதியில் இருந்து செலவுக்கு அளித்து வருகின்றனர். இதனால் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியை உயர்த்தி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- மாணவர்களுக்கு பொது நிதியில் இருந்து, போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியாக ரூ.125 வரை வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அதிகப்படியான மாணவர்கள் கலந்து கொண்டால், தலைமையாசிரியர்கள் சொந்த செலவில் மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது.

    நடப்பாண்டு போட்டிகள் துவங்க உள்ள நிலையில் அதற்கான தொகையை அரசால் உயர்த்தி வழங்க வேண்டும். இதேபோல போட்டி நடத்தும் பள்ளி நிர்வாகம், இதற்கான அனைத்து தொகையையும் செலவிட வேண்டும். நிதி விடுவிக்க தாமதம் ஏற்படுவதால் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் பயணப்படி வழங்குவதில் குழப்பம் நிலவுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
    • ரோஜாவனம் இண்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ரோஜா வனம் இண்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச ஒலிம்பிக் தின விளையாட்டு போட்டி கள் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி தலைவர் அருள்கண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அருள்ஜோதி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெயா சங்கர் வரவேற்று பேசினார்.

    பள்ளி இயக்குனர் சாந்தி அறிமுக உரையாற்றினார். விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்துகொண்டு விளை யாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதுடன் கூடவே விளையாட்டில் ஆர்வம் கொள்வதால் உடல் நலன் மேம்படுவதுடன், நல்ல ஆரோக்கியாமாக வாழலாம் என பேசினார். மேலும் பள்ளியினுடைய அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள், விளையாட்டு மைதானம் இவை அனைத்தும் சிறப்பாக அமையப்பெற்றுள்ளதாக பள்ளி நிர்வாகத்தை பாராட்டினார்.

    முன்னதாக அவர் பல்வேறு விளையாட்டு குழுக்களை தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி மாணவர்களுடன் கலந்துரை யாடினார். மாணவர்கள் விளையாட்டில் காட்டிய ஆர்வத்தை பாராட்டினார். மாணவர்களுடனிருந்து ஒவ்வொரு போட்டிகளையும் தொடங்கி வைத்து ஊக்கப்படுத்தினார்.

    முடிவில் துணை முதல்வர் அஜிதாகுமாரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சர் விளையாட்டு போட்டிக்கான கோப்பையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
    • விளையாட்டுப் போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை முதல் வரும் 25-ம் தேதி வரை சென்னையில் 17 இடங்களில் நடைபெறுகிறது. இதில் கபடி, கைப்பந்து, கூடைப்பந்து, பளுதூக்குதல், செஸ், கால்பந்து, தடகளம் ஆகிய போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    கிரிக்கெட் போட்டி அசோக் நகர், மெரினா கடற்கரை, குருநானக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, போரூர் எஸ்.ஆர்.எம். கல்லூரி ஆகிய இடங்களிலும், பேட்மிண்டன், சிலம்பம், டேபிள் டென்னிஸ், மாற்றுத்திறனாளி விளையாட்டுகள் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும், நீச்சல் போட்டி வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்திலும், டென்னிஸ் நுங்கம்பாக்கத்திலும், ஹாக்கி போட்டி ராமச்சந்திரா பல்கலைக்கழகத்திலும், பீச் வாலிபால் மெரினா கடற்கரையிலும் நடத்தப்படுகிறது.

    இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், அலுவலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை தன்னார்வலர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக சென்னையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ, மாணவியர் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் உணவு மற்றும் பேருந்து வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    அதன்பின் பேசிய அவர், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டுமே முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகிறது. நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே நமது இலக்கு என தெரிவித்தார்.

    • பரமத்திவேலூர், பள்ளி சாலையில் உள்ள கிளை நூலக வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம், கடந்த 9-ம் தேதி தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • இப்பயிற்சி முகாமில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பள்ளி சாலையில் உள்ள கிளை நூலக வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம், கடந்த 9-ம் தேதி தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இப்பயிற்சி முகாமில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், புத்தகம் படித்தல், கணினி பயன்பாடு, கதை சொல்லுதல், கைவினை பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, செஸ், கேரம் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் ஆர்வமுள்ள மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என பரமத்திவேலூர் 2-ம் நிலை கிளை நூலகர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தென்மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை யொட்டி காளீஸ்வரி கல்லூரியின் உடற்கல்விதுறை சார்பில் தென்மா வட்டத்தை சேர்ந்த 19 வயதிற்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கான கைப்பந்து, கூடைப்பந்து, கபடி மற்றும் கோ-கோ போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை காளீஸ்வரி குழுமத்தின் இயக்குநர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்.

    மொத்தம் 38 அணிகளை சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றனர். கைப்பந்து மற்றும் கூடைப்பந்தில் நெல்லை எம்.என்.எம். அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளியும், கபடி போட்டியில் ராஜபா ளையம்,ஆர்.சி.மீ னாட்சிபுரம் மேல்நிலைப்பள்ளியும், கோ-கோ போட்டியில் திருத்தங்கல் எஸ்.என்.ஜி. பெண்கள் மேல்நி லைப்பள்ளி அணியும் முதலிடத்தை பெற்றன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு காளீஸ்வரி குழுமத்தின் இயக்குநர் ராஜேஷ் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    • பொதுப் பிரிவு ஆண்களுக்கான போட்டிகள் நாளை நடக்கிறது.
    • நேரடியாக போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக பொதுப் பிரிவு ஆண்களுக்கான கபடி, கைப்பந்து, இறகுப்பந்து (ஒற்றையர்), சிலம்பம் ஆகிய போட்டிகள் நாளை (திங்கட்கிழமை) தருமபுரிமாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

    இதேபோல் பெண்களுக்கான கபடி, கைப்பந்து, இறகு பந்து (ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர்) சிலம்பம் ஆகிய போட்டிகள் நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை), ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகள போட்டிகள் மார்ச் மாதம் 1-ந் தேதியும் (புதன்கிழமை) தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

    இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் பொதுப்பிரிவு போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். போட்டி நடைபெறும் நாளில் தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு ஆஜராக வேண்டும்.

    மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்கனவே இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இணையதளத்தில் பதிவு செய்யாமல் நேரடியாக போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 27-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகிறது.
    • மொத்தம் 580 அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கடந்த 7-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 27-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகிறது.

    5 பிரிவுகளில் நடந்து வரும் இந்த போட்டிகளில், பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுப்பிரிவினருக்காக விளையாட்டுப் போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன. நேற்று அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

    இதில் கைப்பந்து, கபடி, கையுந்து பந்து, இறகுப்பந்து, தடகளப் போட்டிகள் மற்றும் செஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண், பெண் இருவருக்கும் நடத்தப்பட்டன. போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

    இதில், ஆண்கள் பிரிவில் 400 பேரும், பெண்கள் பிரிவில் 180 பேரும் என மொத்தம் 580 அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் அம்ரித், பலூன்க ளை பறக்கவிட்டு தொடங்கி வைத்தார்.
    • பல்வேறு போட்டிகள் வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித், பலூன்க ளை பறக்க விட்டு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதவியேற்ற நாள் முதல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதேபோன்று விளையாட்டுத் துறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

    அதன் அடிப்படையில் இன்றைய தினம் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-

    மாணவிகள், மாற்றுத்திற னாளிகள், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர் என அனைவரும் பங்கேற்கும் வகையில் கால்பந்து போட்டி, தடகள போட்டி, இறகுபந்து போட்டி, கபடி போட்டி, சிலம்பம், நீச்சல் போட்டி, கிரிக்கெட் போட்டி, ஆக்கிப் போட்டி, கையுந்து போட்டி என பல்வேறு போட்டிகள் வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது.

    எனவே அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று நீலகிரி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பள்ளி அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை வாழ்த்தி, அணி தலைவர்களிடம் கால்பந்தினை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி தாசில்தார் ராஜசேகர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள் இன்று தொடங்கியது
    • 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

    நாகர்கோவில்:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திற னாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவ-மாணவி களுக்கான போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று 6-ந்தேதி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான போட்டிகள் தொடங்கியது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டனர். சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று போட்டியில் பங்கேற்றனர். கல்லூரி மாணவிகளுக்கான கபடி போட்டி, ஆக்கி போட்டி, வாலிபால் போட்டி, டேபிள் டென்னிஸ் போட்டி, கால்பந்து போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் கபடி போட்டியை நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா தொடங்கி வைத்தார். மாவட்ட விளை யாட்டு அதிகாரி ராஜேஷ் மேற்பார்வையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கான போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதி வரை விளையாட்டுப்போட்டிகள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    • தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
    • பள்ளி மாணவியருக்கான 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    பள்ளி மாணவியருக்கான 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இறகுப் பந்து போட்டியில் 120 பேரும், வாலிபால் போட்டியில் 9 அணிகளைச் சேர்ந்த 108 பேரும் என மொத்தம் 628 மாணவியர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    போட்டியில், முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே, ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். இன்று முதல் 10-ந் தேதி வரை, பள்ளி மாணவ, மாணவியருக்கு வாலிபால், கால்பந்து, சிலம்பம், மேசைப்பந்து, கபடி, கூடைப்பந்து, நீச்சல், மட்டைப்பந்து , ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.

    அதேபோல், வருகிற 6-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, நீச்சல், இறகுப் பந்து, தடகளம், கையுந்து பந்து, கபடி, கூடைப்பந்து, கால்பந்து, மேசைப்பந்து, மட்டைப்பந்து, சிலம்பம், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

    மேலும், வருகிற 13 மற்றும் 15-ந் தேதிகளில் அரசு ஊழியர்களுக்கு, கபடி, தடகளம், வாலிபால், இறகு பந்து போட்டிகளும், வரும் 14-ந் தேதி, பொது பிரிவினருக்கு, கபடி, தடகளம், சிலம்பம், வாலி பால், இறகு பந்து, மட்டைபந்து ஆகிய போட்டிகளும், வரும் 15-ந் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கு, கபடி, தடகளம், சிறப்பு கையுந்துபந்து, இறகுப்பந்து, எறிபந்து போட்டிகளும் நடைபெற உள்ளது.

    அனைத்து போட்டி களிலும், வெற்றி பெறுப

    வர்களுக்கு, மொத்தம் ரூ.41.58 லட்சம் மதிப்பி லான பரிசுத்தொகை வழங்கப்ப டும் என கலெக்டர் தெரி வித்துள்ளார்.

    • சிவகங்கையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 7-ந் தேதி முதல் தொடங்குகிறது.
    • கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலானவிளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை தடகள விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபடி, ஆக்கி, கூடைப்பந்து, கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை போஸ் நகரில் உள்ள பேட்மிட்டன் அகாடமியிலும் நடைபெறும்.

    8-ந் தேதி காலை கபடி, ஆக்கி, கூடைப்பந்து. கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகியவிளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். 9-ந் தேதி கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். 10-ந் தேதி காலை நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், தடகள விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், கபடி, ஆக்கி,கூடைப்பந்து, கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினர் ஆண்களுக்கு மட்டும் சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியிலும், இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை பேட்மிட்டன் அகாடமியிலும் நடைபெற உள்ளன.

    11-ந் தேதி காலை நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும், கபடி, ஆக்கி, கூடைப்பந்து, கையுந்து பந்து, மேசைப்பந்து, கால்பந்து விளையாட்டுப்போட்டிகள் கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினர் பெண்களுக்கு மட்டும் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    13-ந் தேதி காலை கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், கிரிக்கெட் போட்டிகள் பொதுப்பிரிவினர் ஆண்களுக்கு மட்டும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. 14-ந் தேதி காலை கிரிக்கெட் போட்டிகள் பொதுப்பிரிவினர் பெண்களுக்கு மட்டும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. 15-ந் தேதி காலை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் காரைக்குடிஅழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும், இறகுப்பந்து போட்டிகள் பொதுப்பிரிவினர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிவகங்கை பேட்மிட்டன் அகாடமியிலும், பொதுப்பிரிவினர்ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி, கையுந்து பந்து, தடகளம் விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற உள்ளது.

    16-ந் தேதி காலை அரசு ஊழியர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து, தடகளம்,கையுந்து பந்து, கபடி, செஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும்,17-ந் தேதி காலை மாற்றுத்திறனாளிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து, தடகளம்,எறிபந்து, கபடி, adopted volley ball ஆகிய போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற உள்ளது. 20-ந் தேதி காலை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கிரிக்கெட் போட்டிகள் காரைக்குடிஅழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும், 21-ந் தேதி காலை பள்ளி மாணவிகளுக்கு மட்டும் கிரிக்கெட் போட்டிகள் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

    டென்னிஸ் போட்டிகள் 23-ந் தேதி காலை மாணவர்களுக்கும், 24-ந் தேதி காலை மாணவிகளுக்கும், காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. பளு தூக்கும் போட்டிகள் 23-ந் தேதி காலை மாணவர்களுக்கும், 24-ந் தேதி காலை மாணவிகளுக்கும், காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெறும்.

    கடற்கரை கையுந்து பந்து போட்டிகள் 13-ந் தேதி ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் நடைபெறும். இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள வரும்போது, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், Bonafied சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
    • இதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

    விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    அத்தகைய போட்டிகள் நடைபெறும்போது விளை யாட்டு வீரர்கள் அதிக ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைக்கு ஏற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்று சிறந்த வீரர்களாக திகழ்ந்திட வேண்டும்.

    அந்த வகையில் தற்போது இறகுப்பந்து, மேசைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, கபாடி, ஆக்கி, கூடைப்பந்து, நீச்சல் போட்டி, டென்னிஸ், கிரிக்கெட் ஆகிய போட்டிகள் வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இப்போட்டியில் அதிகளவு ஆர்வமுடன் பங்கேற்று பயன் பெற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன் பிறகு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×